tamilnadu

img

நெற்களஞ்சியத்தை அழிக்கவே சிப்காட் தொழில் பூங்கா

திருவள்ளூர், ஜூலை 4-   திருவள்ளூர் மாவட்டம், மாநல்லூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் புதனன்று (ஜூலை 3) நடைபெற்றது. சிப்காட் தொழிற் பூங்காவானது சுமார் 286.065 எக்டேர் பரப்பளவில் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இப்பூங்காவில் சாய மூலப் பொருட்கள், மருத்துவ மூலப் பொருட்கள், நெகிழி மூலப் பொருட்கள், வர்ண கலவை மற்றும் இதர உபரி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமையவுள்ளது.

 கருத்துக் கேட்பு கூட்டத்தில், மாநல்லூர், சூரப்பூண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை பதிவு செய்த னர்.  நாள் ஒன்றுக்கு சுமார் 8.64 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், இங்கு உள்ள நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும். எனவே வேறு இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். ஏற்கனவே காற்று, நிலம், நீர் என அனைத்தும் பாதித்துள்ள நிலையில் இந்த தொழில்பேட்டை வந்தால் கடும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடும், தற்போது உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் புற்று நோய், காச நோய் உட்பட பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டு ள்ளோம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவித்த னர்.

ஏற்கனவே கும்மி டிப்பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய இடங்க ளில் தொழில் பூங்காக்கள் நிறுவியுள்ளனர். அங்கு வேலை வாய்ப்புகள்  வழங்கப்படும் என உறுதி யளித்தனர்.எந்த வேலையும் அரசு வழங்கவில்லை. ஏராளமான ஆலைகள் மூடிக்கிடக்கிறது. புதிய வேலை வாய்ப்பு என்பதெல்லாம் நம்பகத் தன்மையில்லை.நெல் களஞ்சியமாக உள்ள மாநல்லூர் பகுதியை அழிக்கத்தான் இந்த திட்டம் அமையும் என்பதால் இதனை முற்றிலும் கைவிட வேண்டும்,இதையும் மீறி  தொழில் பூங்கா கொண்டு வந்தால் கடும் போராட்ட ங்கள் நடைபெறும் என பொதுமக்கள் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து மக்களின் இந்த கருத்துக்களை மத்திய அரசிற்கு தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கும்மிடிப்பூண்டி) பி.ரவிச்சந்திரன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.