tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தத் சட்டத்தை எதிர்த்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும், ஜனவரி 8 அன்று நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன், சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.