tamilnadu

தனியார் தண்ணீர் லாரிகள்  இன்று வேலை நிறுத்தம்

 சென்னை,ஜூலை 7- இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் எடுக்கப்போவ தில்லை என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. தனியார் தண்ணீர் லாரிகளை அரசு அதிகாரிகள் சிறைபிடிப்பதை கண்டித்து 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்திருக்கிறது. சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உட்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்து விடுவதாக, அவர் கூறினார். பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசின் முறையான அனுமதி கிடைக்கும் வரை, ஜூலை 8 திங்கள் முதல் தண்ணீரை எடுக்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.