tamilnadu

img

அரசு பள்ளிகளை பாதுகாக்கக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பிரச்சாரம்

திருத்தணி, செப்.27. அரசுப்பள்ளிகளை பாது காக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  விழிப்புணர்வு பிரச்சாரம் திருத்தணியில் நடத்தப் பட்டது. தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ திரும்ப  பெற வேண்டும், அரசுப்  பள்ளிகளை மூடாதே தமிழ் வழிப் பள்ளிகளை  அழிக்காதே தொடக்கக் கல்வித் துறையை சீரழிக்கும்  அரசாணை 145 ஐ திரும்ப  பெற வேண்டும்,  3,5,8 வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு மற்றும். 9,10,11,12 வகுப்பு களுக்கு பருவத்தேர்வை ரத்து செய்யவேண்டும், மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும்,  அரசு பள்ளிகளில்  மாணவர் சேர்க்கை உயர்த் திட தமிழ் வழி கல்வியை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 25 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை  விழிப்புணர்வு பிரச்  சார இயக்கம் நடைபெற்றது. திருத்தணியில் நடை பெற்ற  கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கத் தலைவர் ச. மோசஸ், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பிரசன்னா,  காஞ்சிபுரம்  மாவட்டச் செயலாளர் மேத்யூ,  வேலுர் மாவட்டச் செயலாளர் அமர்நாத் உட்பட பலர்  பங்கேற்றனர்.