நாகப்பட்டினம், ஜன.11- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழு விய தர்ணா போராட்டம் நாக ப்பட்டினம், அவுரித்திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; தேசி யக் கல்விக் கொள்கை-2019, எதிர்காலக் கல்வி வளர்ச்சி க்கும் பின்தங்கிய குழந்தை களின் எதிர்காலமும் மிக நாச மாகும்; எனவே இதனைத் திரும்பப் பெற வேண்டும்; ஜாக்டோ-ஜியோ இயக்க ங்கள் நடத்திய பல்வேறு கோரிக்கை - உரிமைப் போ ராட்டங்களுக்காக ஆயிரக்க ணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை நல்லெ ண்ண அடிப்படையில் உடன டியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த தர்ணாப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.புகழேந்தி தலைமை வகி த்தார். மாவட்டச் செயலா ளர் எம்.காந்தி வரவேற்புரை யாற்றினார். கோரிக்கை களை விளக்கி, மாநிலச் செய லாளர் சித்திராகாந்தி, மாநி லச் செயற்குழு உறுப்பினர் ஜா.சார்லி தேவப்பிரியம் ஆகியோர் உரையாற்றினர். மாநிலத் துணைத் தலை வர் அ.ரகீம் சிறப்புரையாற்றி னார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், வருவா ய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலளர் து.இள வரசன், ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.என். பக்கிரிசாமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, புள்ளி யல்துறை சார்நிலை அலுவ லர் சங்க மாநிலத் தலைவர் ப. அந்துவன்சேரல், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் கே.இராஜு, வெ.சர வணன் ஆகியோர் போரா ட்டத்தை ஆதரித்துப் பேசி னர். மாவட்டப் பொருளாளர் மா.ஜெகநாதன் நன்றி கூறி னார்.