தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் போரூர் கோட்ட நிர்வாகி அகமது பாட்ஷா பணி நிறைவு பாராட்டு விழா புதனன்று (ஜூன் 26) கோவூர் துணை மின்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், சென்னை தெற்கு திட்டத் தலைவர் வி.பங்குனியான், செயலாளர் ஏ.முருகானந்தம், பொருளாளர் டி.பண்டாரம்பிள்ளை, கோட்டத் தலைவர் எஸ்.பழனி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.