tamilnadu

img

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவு

தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்குவதற்கு மற்றும் இசைவாணை புதுப்பித்தலின் (Renewal of Consent) கால அவகாசத்தை அதிகரித்து உள்ளது. இதன்படி மொத்த கட்டணத்தை கட்டும் பட்சத்தில் சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு 5 ஆண்டுகளும், ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளுக்கு 10 ஆண்டுகளும், பச்சை வகை தொழிற்சாலைகளுக்கு 14 ஆண்டுகளாகவும்  கால அவகாசத்தை அதிகரிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு ஆணை பிறப்பித்துள்ளது. இது சிறு, குறு வணிகங்கள் எளிதாக அமைவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்குமான முன்னெடுப்பு என்று அரசு கூறியுள்ளது.
ஆனால் இது சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கை என்று பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.