tamilnadu

img

வாக்குக்கேட்டுப் பிரச்சாரம்...

விருகம்பாக்கம் தொகுதி, 127வது வட்டம், பாரதியார் நகர், ராஜா தெரு, சேமாத்தம்மன் நகர் பகுதிமக்கள் தங்களுக்கு குடி மனைப் பட்டா கோரி டிச.30 அன்று அமைந்தகரை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற  உள்ளது. இதனையொட்டி அப்பகுதி மக்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியத்திடம் அளித்தனர். உடன் பகுதிச் செயலாளர் சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர் ஆர்.முருகன், கிளைச் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர உடன் உள்ளனர்.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஜி.சங்கரன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு மதுரவாயல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ்  வானகரம் பகுதியில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தை நிறைவு செய்து தென்சென்னை மாவட்டச் செயலாளர்  ஏ.பாக்கி யம் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எல்லாபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் ஜி.சம்பத் இரு சக்கர வாகனங்களில் சென்று சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில்  வாக்கு சேகரித்தார்.இதில் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் வி.அறிவழகன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெ. ராபர்ட் எபிநேசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பொறுப்பிற்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் எம்.ரவிக்குமார் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் கட்சியின் மாநிலக் குழு  உறுப்பினர் எஸ். கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ்,  பி.துளசிநாராயணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.சூர்யபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பார்வையற்றோருக்கு இந்தியன் வங்கி நடத்திய செஸ் சாம்பியன்  போட்டியில்  விருது நகரை சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற வீரர் மாரிமுத்து பட்டத்தை வென்றார். அவருக்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே..பட்டாச்சார்யா கோப்பையை வழங்கினார். தஞ்சாவூரை சேர்ந்த ஹரிஹரன் காந்தி, கடலூரை சேர்ந்த செல்வகுமார் சண்முகசாமி ஆகியோர் முறையே  2வது 3வது இடத்தை பிடித்தனர். சென்னையை சேர்நத வாசுகி சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.