சென்னை:
சிறுமிகள் கடத்தல் புகாரில் தலைமறைவாகியுள்ள போலிச்சாமியார் நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தைஉருவாக்க வேண்டும் என்ற எனது ஆசைநிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை.சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத் துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடையவேண்டும் என்பது குறித்து உயில்எழுதி வைத்துவிட்டேன். தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசைஎன்று தெரிவித்துள்ளார்.