புதுச்சேரி, ஆக. 23- சிஜடியு தலைவர்களை தாக்கிய காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுவையின் மிகப்பெரிய பொருளாதார பலமாக இருப்பது சுற்றுலாத்துறை. அதற்கு பக்கப்பலமாக உள்ளவர்கள் சிறுவணி கர்கள், பெட்டிக்கடைகாரர்கள், நடைபாதை வியாபாரிகளே. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் துணை நிலை ஆளுநராக இருந்து வரும் கிரண்பேடியின் தூண்டுதலின் பேரிலும், பெரு வணிக நிறுவனங்களில் மாமூல் பெற்று வரும் அதிகாரிகளில் ஒரு பிரிவினரும், நகரை அழகுப்படுத்த போவதாக கூறி வரும் நக ராட்சி உயர் மட்ட அதிகாரிகளும், அன்றாடம் மாமூல் கிடைக்காத சில காவல், பொதுப் பணி, நகராட்சி ஆகிய துறைகளில் பணி யாற்றும் தொழிலாளர் விரோத சக்திகளால் தவறானவழிக்காட்டப்படுகிறது. இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதராமாக இருந்து வரும் சிறுவணிக, பெட்டிக் கடைகளை அகற்றும் பணியை மிகவும் உற்சாகமாக செய்து வரு கின்றனர். ஆனால், புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 1600 ஏக்கர் அரசு நிலத்தை பல்வேறு வணிக நிறு வனங்களும், பெரும் பணக்காரர்களும் ஆக்கரமித்து முறைகேடாக ஒப்பந்தம் பெற்று தனதாக்கிக் கொண்டதை கண்டு கொள்ளாமலும் இருந்து வருகின்றனர்.
புதுச்சேரி மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் பணியை செய்யாமல் ஏழை- எளிய மக்களின் வாழ்க்கையை சூறையா டும் பணியை மாவட்ட ஆட்சியர் செய்து வரு கிறார். குறிப்பாக புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தின் அருகில் சுமார் 50ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட சிறுகடைகளின் மின் இணைப்பும், நகராட்சியின் அனுமதியும், வரியும் செலுத்தி வியாபாரம் செய்து வந்த ஏழை-எளிய வியாபாரிகளை காவல்துறை, சிறப்பு பட்டாலியன் படைப் பிரிவின் துணை யோடும், உள்ளூர் அடியாட்கள் துணை யோடும் மிகப் பெரிய தாக்குதலை நடத்தி கடைகளையும் அதில் இருந்த பொருட் களை யும் அடித்து நொறுக்கி நாசப்படுத்தி உள்ள னர். இந்த அராஜகபோக்கை கண்டித்த சிஜ டியு புதுச்சேரி பிரதேசச் செயலாளர் சீனுவா சன், பொருளார் பிரபுராஜ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிள், வியாபாரிகள் நல சங்கத் தலைவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர். சிலரை கைதும் செய்துள்ளனர்.
இத்தகைய அடாவடி அராஜக நடவ டிக்கை என்பது ஆளும் காங்கிரஸ் அரசின் துணையுடன் நடைபெற்று உள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பிரதேசச் செய லாளர் ஆர். ராஜாங்கம், “ உயர்நீதிமன்ற தீர்ப்பு களும் சிறு வணிக, நடைபாதை வியாபாரி கள் நலச் சட்டம் 2014 இருக்கும் போதும், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 11.01.2017 அன்று வழங்கிய தீர்ப்பில் நடைபாதை கடைகள் அகற்றப் படும்போது மாற்று இடம் வழங்கிவிட்டுதான் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை புதுச்சேரி அரசும் மாவட்ட ஆட்சிய ரும் செயல்படுத்தாமல் அதிகார சிஜடியு சங்கத் தலைவர்களை தாக்கிய காவல்துறையினர் மீது புதுச்சேரி அரசு நட வடிக்கை எடுக்கவேண்டும்.பாதிக்கப் பட்டுள்ள ஏழை சிறுவணிகர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும்வகையில் புதுச்சேரி அரசு அவர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் கடைகள் நடத்தஅனுமதிக்கவேண்டும் அல்லது மாற்று இடம் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட்கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ராஜாங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.