tamilnadu

img

கவிஞர் நந்தலாலா உடல் நலக்குறைவால் காலமானார்!

பெங்களூரு,மார்ச்.04- கவிஞர் நந்தலாலா உடல் நலக்குறைவால் திடீரென மறைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா உடல்நகக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் எம்.பி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.