சென்னை:
விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த வீரர்களை அதிகளவில் பணியமர்த்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக, சிஐஎஸ்எப் டிஐஜி அனில் பாண்டே தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழியிடம் இந்தி தெரியாதா என, சிஐஎஸ்எப் வீராங் கனை கேட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக பேசியுள்ள அனில் பாண்டே, மொழிச் சிக்கலை தவிர்ப்பதற்காக பயணிகளுடன் நேரடித் தொடர்புகொண்ட பதவிகளில், உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.மேலும், பயணிகளின் உணர்வுகளை மதித்து, சிஐஎஸ்எப் வீரர்கள் அவர் களிடம் கண்ணியத்தை கையாளுவதாகவும் குறிப்பிட்டார்.