tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்காக பெரியார் மணியம்மை மருத்துவமனை ஒப்படைப்பு.....

சென்னை:
கொரோனா வைரஸ் பெரும் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனையை தமிழக அரசின் மருத்துவ மற்றும் சுகாதார துறையிடம் ஒப்படைத்துள்ளதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா கடும் தொற்று அலை பேரபாயமாக வீசிக் கொண் டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நமது இயக் கத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற தொண் டறச் சிந்தனையோடு, கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெரியார் திடலில் - சுற்று வட்டார மக்களுக்கு  பயன்பட்டுவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனையை தமிழ்நாடு அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அரசுக்கு நன்றி...
கொரோனா கொடுந்தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க - தமிழக அரசின் மருத்துவத் துறை எப்படி, எந்தப் பிரிவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தோம். துடிப்போடு விரைந்து செயல்படும் மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தோம்.அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்று, மருத்துவமனையை தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அதற்கான ஏற்பாட்டினை அதிகாரிகள் மூலம் செய்யத் தொடங்கி விட்டனர். இதற்கு அரசுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.தற்போதுள்ள 30 படுக்கை வசதியை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

ரூ. 10 லட்சம் நன்கொடை
போர்க்கால நடவடிக்கையாக, புயல் வேகத்தில் செயல்படும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நன்கொடையையும் முதலமைச்சரின் கொரோனா  பொது நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறோம்.இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.