tamilnadu

img

மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்க விழா

புதுச்சேரி, ஜன. 17- பொங்கல் பண்டிகையை யொட்டி மக்கள் ஒற்றுமை சமூக நல்லிணக்க விழா  புதுச்சேரியில் நடை பெற்றது. மக்கள் ஒற்றுமை சமூக  நல்லிணக்கத்தை வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து 10 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு மற்றும் கலை  நிகழ்ச்சிகள் பரிசளிப்பு விழா புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரில் நடைபெற்றது. விழா விற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளைத் தலை வர் நிஷாந்த் தலைமை தாங்கினார். இந்திய மாண வர் சங்க பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், வாலிபர் சங்க பிரதேசத் தலைவர் ஆனந்த், உழவர்கரை நகரத்  தலைவர் சஞ்சய் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். புதுச்சேரி அதிர்வுகள் தப்பாட்டம் கலைக் குழுவின்  சார்பாக மயிலாட்டம், மாடாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.  முன்னதாக, நடத்தப் பட்ட குடியுரிமை திருத்தச்  சட்டத்திற்கு எதிராக உரிய டித்தல்  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும்,கயிறு இழுத்தல், பெண்களுக்கான கோலப்போட்டி உள்ளிட்ட  15 க்கும் மேற்பட்ட விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  விழாவில் மாணவர் மற்றும் வாலிபர் சங்க நிர்வா கிகள் கௌதம்,  நிர்மல்,   ராஜ்  குமார், ஜஸ்டின்  ஈஸ்வர்,  சச்சின், விஸ்வா, பிரவீனா உள்ளிட்ட அப்பகுதி மக்கள் திரளானோர் பங்கேற்றனர் முன்னதாக மாணவர்களின் இசை நடனங்கள் நடை பெற்றது.