tamilnadu

img

பணப்பலன்கள் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பணப்பலன்கள் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச.11 - ஆந்திராவைப் போல் ஓய்வூதிய பணப்பலன்கள் மற்றும் கருவூலம் வழங்க வேண்டும் என்று வியாழனன்று சென்னை எம்ஆர்சி நகர் நிர்வாக அலுவலக வளாகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பணி வரன்முறை செய்யப்பட்ட என்எம்ஆர் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும். சிறப்பு சேமநலநிதி, பிஎஃப் வட்டி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் இறப்பு கால நிதி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.  தனியார்மயத்தை அமல்படுத்திய அரசாணைகள் 139, 10, 152 ரத்து செய்ய வேண்டும். கருணை அடிப்படை நியமனம் 25 விழுக்காடு அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு உயர்வு வழங்க வேண்டும். சிபிஎஸ் முழு தொகை வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல  கோரிகைக்கைள் வலியுறுத்தப்பட்டது. சங்கத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் எம்.துரை பாண்டியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப் பொருளாளர் ஜெ.பட்டாபி, அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு மாநிலப் பொதுச்செயலாளர் கி.இளமாறன், சென்னை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் என்.மனோகரன், வரலட்சுமி (ஒருங்கிணைப்பு குழு) உள்ளிட்டோர் பேசினர்.