tamilnadu

img

அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை புறக்கணிக்காதீர்கள்: டி.ஆர்.பாலு...

சென்னை:
அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை புறக் கணிக்க வேண்டாம் என்று அதிமுகவிடம் டி.ஆர்.பாலு எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா எம்எல்ஏ, சண்முகம் சாலையில் தொகுதி நிதியிலிருந்து சுமார் ரூ.85 லட்சம் செலவில் நூலகம் அமைத்துள்ளார். இதை திருப்பெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.அப்போது டி.ஆர். பாலு பேசுகையில், “ஆட்சியில் உள்ளவர்கள் மாறலாம். வேறு கட்சியின் ஆட்சி அமையலாம். அலுவலர்கள் மாறக் கூடாது. அவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும்” என்றார்.

நான் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அரசு விழாவில் கலந்து கொள்கிறேன். இப்போது தான் என்னை முதன் முறையாக அழைத்துள்ளார்கள். இதற்கு முன் எந்தஅரசு விழாவிலும், என்னை அழைக்க மாட்டார் கள். நம்முடைய நண்பர்கள் தான், தற்போது ஆட்சியில் உள்ளார்கள். எந்த ஆட்சி நடந்தால் என்ன? அதிமுகவில் உள்ளவர்களும் என் நண்பர்கள் தான்; அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, யாரையும் புறக்கணிக் காதீர்கள். நாங்கள் எதிரிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.