tamilnadu

img

ஒரே வளாகத்தில் செயல்படும்  அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு

சென்னை:
ஒரே வளாகத்தில் தனித்தனியே செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செய லாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து  வெளியிடப் பட்டுள்ள அரசாணையில், தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி,மாநகராட்சி, தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளி களின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதி யும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படை க்கப்படுகிறது.  அரசு தொடக்கப்பள்ளி கள் பெரும்பாலும், ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படு வதால், ஒருவர் விடுப்பு எடுத்தாலும், மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது என்பதால் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பொறுப்பு வழங்கியதன் மூலம், இனி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணினிஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், விளை யாட்டுப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, ஸ்மார்ட் கிளாஸ், முதுகலைப் பட்டதாரி ஆசிரியரின் வகுப்புகள் என்று அனைத்தையும் தொடக்கப்பள்ளி மற்றும்நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பயன்படுத்த முடியும். இந்த மாற்றத்தி னால் ஈராசிரியர் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியரைக் கொண்டு வகுப்பு களை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும்.  புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. அதே வேளையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அப்படியே தங்கள் பணியைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.