tamilnadu

img

கட்டிட விபத்தில் ஒருவர் பலி - ரூ.5 லட்சம் நிவாரணம்!

சென்னை,நவம்பர்.05- சென்னையில் கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி இடிந்து விழுந்ததில் சையத் குலாப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.