tamilnadu

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: மேலும் ஒருவர் கைது

ஆம்பூர், பிப். 9- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிமுக பெண் பிரமுகர் பிரேமா,  பெங்களூரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் தாய் லதா ஆகியோர் கடந்த 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய வேலூர்  காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த லட்சுமியை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் பதுங்கியிருந்த லட்சுமியை ஞாயிறன்று (பிப். 9) கைது செய்தனர். பின்னர் ஆம்பூர் அழைத்து வரப்பட்ட லட்சுமி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.