தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ள சென்னை ஒன் செயலியை ஒரே நாளில் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய ‘சென்னை ஒன்று மொபைல் செயலியை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைக்கிறார். சென்னையில் உள்ள மக்கள், ‘சென்னை ஒன்’ ஆப் மூலம் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ டிக்கெட், கேப், ஆட்டோ அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். இந்த புதிய செயலிக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 79,771 பேரும் இன்று 24,666 பேரும் சென்றை ஒன்று செயலியை பதிவிறக்கம் செய்தனர். இன்று காலை 10 மணி நிலவரப்படி மொத்தம் 1,04,437 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
இதில் 2,382 பேர் (54 சதவீதம்) பேருந்திலும் 1,212 பேர் புறநகர் மின்சார ரயிலிலும், 799 பேர் மெட்ரோ ரயிலிலும் சென்னை ஒன்று செயலி மூலம் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.