திமுக தலைமையிலான கூட்டணியில் பிரதான கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இரா.அதியமான் தலைமையிலான ஆதித் தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி, சு.க.முருகவேல்ராஜனின் மக்கள் விடுதலைக் கட்சிக்கு ஒரு தொகுதி, இரா.வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி என மூன்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அந்த கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு விரைவில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படையும், தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன.