சென்னை, செப்.17- தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள உருவச் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது க்ஷ் தளத்தில் தந்தை பெரியார் குறித்துப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்
புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர் நடை போட வைத்த பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்!
இன்று உலகம் முழுவதும் தமிழர் உயர்ந்த நிலைகளில் இருப்பதற்கு, தந்தை பெரியாரின் சிந்தனையும் உழைப்புமே அடித்தளம்!
ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அவரது அறிவுத்தீதான், நமது பாதைக்கான வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் சமத்துவ உலகத்தை நிறுவுவதே நமது தலையாய பணி! எனக் குறிப்பிட்டிருந்தார்.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று சமூகநீதி உறுதிமொழி பலராலும் ஏற்கப்படுகிறது.