tamilnadu

img

வழிகாட்டுதல்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை,மார்ச் 26- அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வும் விலைகள் அபரிமிதமாக உயராமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்  பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: உலகையே அச்சுறுத்தும் கொரானா தொற்று நோயி லிருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்து வரும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் விலைகள் அபரி மிதமாக உயராமல் இருக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர்கள் காய்கறி, பழங்கள், கீரைகள் ஆகிய வற்றை சந்தைக்கு அன்றாடம் கொண்டு வந்துதான் தீர வேண்டும். இல்லையென்றால் பெருத்த நட்டத்திற்கு விவசாயிகள் ஆளாவதுடன், வீணாகி யாருக்கும் பயன் படாமல் போய்விடும். மக்களுக்கு மேற்படி பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அன்றாடம் பொருட்கள் சந்தைக்கு வருவதும் அவசியம். இது தொடர்பாக மார்ச் 24 அன்று தமிழக அரசின் வேளாண்மைத்துறை வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில் அதிகாரி களும், காவல்துறையினரும் செயல்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். விற்பனை செய்ய வந்த விவ சாயிகளை தடுத்ததால் பல இடங்களில் விவசாயி களுக்கும் காவல் துறையினருக்கும் தகராறு ஏற்பட்டுள் ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வரு கிறோம். வேளாண் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டும் உத்த ரவு காவல்துறையினருக்கு உரிய முறையில் தெரி விக்கப்படாமல் இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவந்த வர்கள் மீது உட்பட பல இடங்களில் காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. பணி முடிந்து திரும்பிய ஒரு மருத்துவர் மீது காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வைர லாகியுள்ளது. எனவே, தமிழக அரசு வரும் நபர்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பது, இடைவெளியை கடைப் பிடிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற வகையில் செயல்படுமாறு காவலர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.