சென்னை : அரபிக்கடலில் அக்டோபர் 9 அன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக். 8 முதல் 12 ஆம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.