புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூனில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான சுடுகாட்டுச்சாலை, கன்னிக்கோவில் சாலை, பரிக்கல்பட்டு, முள்ளோடை சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் தொடர்ந்து நிகழும் விபத்துகளை தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சரவணன், வடிவேல், சண்முகம், நகர கிளைச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.