tamilnadu

தனியார் துறையில் இடஒதுக்கீடு கூடாதாம்? நிதி ஆயோக் துணைத் தலைவருக்கு தி.க கண்டனம்

சென்னை,ஜூன் 30- சுகாதாரம் - மருத்துவம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஆக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னையில்  நடைபெற்ற திராவிடர் கழக செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்திய அரசமைப்புச் சட்டத்தில், கல்வி அடிப்படை உரிமை என்று கூறப்படுவது போல, குடிமக்களை நோயி லிருந்து மீட்கும் மருத்துவ வசதிகளை முழுமையாக அளிக்கவேண்டியது அரசின் கடமை என்றும், இது குடிமக்க ளின்  அடிப்படை உரிமையாக்க ப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ளதுபோல், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சட்டம் மத்திய அரசிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.தாராள மயம், தனியார் மயம், உலகமயம்  என்பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல் பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமுகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை சார்ந்தும் இட ஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது. நிதி ஆயோக்கின் துணைத் தலைவரான ராஜிவ் குமார் என்பவர் தனியார்  துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று கூறியிருப்பதன்மூலம் பிஜேபி ஆட்சி எத்தகையவர்களை எல்லாம் மிகப் பொறுப்பான பதவிகளில் அமர்த்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.  மக்கள் தொகையில் 70 விழுக்காடு உள்ள பிற்படுத்த ப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுகங்களிலிருந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒருவர்தான். இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகள் நியமனத்தி லும், அகில இந்திய தேர்வைப் புகுத்தி, சமுக நீதியைக் குழி தோண்டிப் புதைத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அரசின் முதன்மை துறைகளுள் நிர்வாகம், சட்டமன்றம் ஆகிய இரண்டிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை உள்ள நிலையில், மூன்றாவது துறையான நீதித்துறையில், உச்ச நீதி மன்றம் வரை, இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சரி யானதாக இருக்க முடியும். இதனை மத்திய அரசு உணர்ந்து உரிய சட்டம் இயற்றவேண்டும் இந்திய பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு முழுமையாக திரும்பப்பெறப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தாக திராவிடர் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.