tamilnadu

என்.ஐ.ஏ சோதனை: 3 பேர் மீது வழக்குப்பதிவு

 சென்னை,ஜூலை 14 சென்னை மற்றும் நாகையில் நடந்த சோதனையை அடுத்து சையது புகாரி, ஹசன் அலி, மொகமது யூசஃப் ஆகிய 3 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாட்டில் சதி வேலைகளை செய்ய திட்டம் தீட்டியதாக இவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரி விக்கின்றன. 3 பேரின் வீடுகளில் இருந்தும் 9 மொபைல்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப்கள், 5 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் 6 பென்டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.