districts

சிறுமியின் வைரலான வீடியோ 3 பேர் மீது போக்சோ வழக்கு

கல்பாக்கம், மார்ச். 14-  கல்பாக்கம் அருகே தனக்கு பாலியல் தொந்த ரவு கொடுப்பதாக சிறுமி  வெளியிட்ட வீடியோ இணை யத்தில் வைரலானதைத் தொடர்ந்து 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப் பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி  இணையதளத்தில் வீடியோ  ஒன்றை பதிவு செய்திருந்தார் அந்த வீடியோவில் தன்னை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தியதாகவும், அதுகுறித்து காவல்துறை யில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டை முன்வைத் திருந்தார். சொல்வதைக் கேட்கவில்லை என்றால் தன்னை ஊரை விட்டு ஒதுக்கி  வைத்து விடுவோம் என  மிரட்டுவதாகவும் தெரிவித் திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவை தொடர்ந்து டிஎஸ்பி தலைமையில் மீண்டும் மறு விசாரணை நடத்தப்பட்டது. சமூக வலைத்தளத்தில் சம்பந்தப்பட்ட வீடியோ மிக வைரலாக பரவி வந்த நிலை யில் இன்று, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந் தன் நேரடியாக சென்று  விசாரணை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்,  சிறுமியின் வீடியோ பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி  3 பேர்  மீது மகளிருக்கு எதிரான  வன்கொடுமை , போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது என்றார்.

வீடியோவை பகிர வேண்டாம்
சம்பந்தப்பட்ட வீடியோ வில் வரும் சிறுமி 18 வயதுக் குக் கீழ் உள்ளதால், வீடி யோவை பகிர்வது சட்டப் படி குற்றம். எனவே யாரும் அதை பகிரவேண் டாம். தற்போது சமூக  வலைத்தளத்தில் அந்த  வீடியோவை பகிர்ந்தவர்க ளின் பட்டியல் எடுக்கப் பட்டுள்ளது அதனடிப்படை யில், சட்ட ஆலோசனையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.