வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் இதுவரை இல்லாத அளவு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டு திருத்திய வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வணிகவரி வருவாய் இலக்கு ரூ.96,109.66 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 15.03.2022 அன்று இந்த இலக்கை வணிகவரித்துறை கடந்துள்ளது. 24.3.2022 தேதிவரை வணிகவரித்துறையில் ரூ.1,00,346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதே போல பதிவுத்துறையில் 2021-22 ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.13,252.67 கோடியாகும். இந்த இலக்கை பதிவுத்துறை 23.03.2022 அன்று கடந்துள்ளது. 24.3.2022 ஆம் தேதி வரை பதிவுத்துறையில் ரூ. 13,406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை இதுவரை இல்லாத அளவில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை ஆகிய இரு துறைகளும் கடந்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.