tamilnadu

img

புதிய கல்வியாண்டு பாடத்திட்டம்... முதலமைச்சர் தொடங்கி வைத்தார்...

சென்னை:
கல்வி தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் (2020-21) ஆன்லைன் வாயிலாகவும், கல்வி தொலைக்காட்சி,வாட்ஸ்அப் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப் பட்டன.கொரோனா தொற்று குறையாததால் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வு எழுத நிலையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இதில் பொதுத்தேர்வை எழுத இருந்த மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.இதற்கிடையே இந்த கல்விஆண்டுக்கான (2021-22) வகுப்புகள்  ஆன்லைன் மூலமே தொடங் கப்பட அதிக வாய்ப்புள்ளது. சில தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அரசுப் பள்ளி மாணவர்களை பொறுத்தவரை கடந்த கல்வி ஆண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும் அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலமும் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில்  கல்வி தொலைக் காட்சி மூலமாக இன்று முதல் வகுப்புகள்  தொடங்கி உள்ளன.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி தொலைக்காட்சி சேவையை சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கொரோனா காரணமாக பள்ளி செல்ல இயலாமல் இருக்கும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி பயில ஏதுவாக 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்குரிய அனைத்து பாடங்களுக்குமான கல்வி தொலைக் காட்சி சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து அதில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை சிறிது நேரம் அமர்ந்து கவனித்தார்.

ரூ.292 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 69 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இந்த நிகழ்வில் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.