tamilnadu

img

நீட் தேர்வு: செப். 13 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை:
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூலை 26-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 13-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிக்கப் படாமல் இருக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.நீட் தேர்வு வருகிற 26-ந்தேதி நடத்தப் படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகவேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 20 ஆயிரத்தை கடக்கும்நிலை உள்ளது. இதனால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் ஜூலை 26-ல் நடக்க இருந்த நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதேபோல் ஜே .இ.இ. முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.