tamilnadu

img

தேசிய மருத்துவர்கள் தினம்: முதலமைச்சர், ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:
டாக்டர் பிதான் சந்திரா ராய் சேவையை பாராட்டி ஜூலை 1-ந்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.  கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நோயாளிகளின் உயிரை காப்பாற்ற நம் டாக்டர்கள் நேரம், காலம் பார்க்காமல் குடும்பத்தையே மறந்து, வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் போன்று நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக தீவிரமாக போர்களத்தில் போர் வீரன் போல் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு தேசிய மருத்துவர் தினமான இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். கொரோனா காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் கடமை, கண்ணியத்துடன் மருத்துவர்கள் பணியாற்றுகின் றனர். மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை; மனித உயிர்களை காக்கும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மருத்துவர் தின வாழ்த்துச் செய்தியில், “தன்னுயிரைப் பற்றி மட்டுமே கவலைப்படும் பெரும்பான்மை மனிதர்களுக்கிடையே, பிறர் உயிர் வாழ்தலைப் பற்றியும் கவலைகொள்பவர்கள் மருத்துவர்கள். பிறருக்காகவே வாழும் வாழ்க்கை என்பது மருத்துவர்களது வாழ்க்கை!பொதுநலனும், கருணை உணர்வும் மிக்க மனிதசேவைத் தொழில் தான் மருத்துவம். இதனை இன்று உலகம் உணர்ந்துவிட்டது. இன்று உலகமே மருத்துவர்களை மட்டும் தான் நம்பி இருக்கிறது. கொரோனா என்ற நோய்த்தொற்று பரவி மனித சமுதாயத்தை மிரள வைத்துள்ள நிலையில் அதற்கு அஞ்சாமல் போராடுபவர்கள் மருத்துவர்கள்.இந்தப் பூமிப்பந்தைத் தனது சேவை உள்ளத்தால் உயிர்ப்பித்துக் கொண்டு இருப் பவர்கள் மருத்துவர்கள். ஒவ்வொரு மனிதனின் உயிருக்குப் பின்னே, உடல்நலத் துக்குப் பின்னே, மகிழ்ச்சிக்குப் பின்னே இருப்பவர்கள் மருத்துவர்கள் தான்.நாடு வாழ, நாம் வாழ மருத்துவர்கள் நலம் வாழட்டும்! மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சுக்கு இனிய நல்வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார்.