tamilnadu

img

தேசிய சதுரங்கம்: சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

சிதம்பரம், ஜன. 14- தேசிய ஊரக விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தேசிய அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.  இதில் தமிழகத்திலிருந்து சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி ஸ்வர்ணலட்சுமி 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.  அதே போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கயல்விழி என்ற மாணவி  இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இம்மாணவிகள் இருவரும் சர்வதேச அளவில் நேபாளில் நடை பெற உள்ள சதுரங்கப் போட்டியில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் மாநில அளவில் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 12 வயதுக்குட் பட்டோர் போட்டியில் பள்ளியின் மாணவன் ஜெய்சன் இரண்டாம் இடமும், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவன் மோகன் ஸ்ரீராம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.  குமார் மற்றும் முதல்வர் ரூபி யாள்ராணி, பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் பிரபாகர்,  உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, விக்னேஷ், எப்சிமேரி உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.