tamilnadu

img

இளைஞர்களின் உற்சாக நாயகன் என்.சங்கரய்யா... நூற்றாண்டு துவக்கவிழாவில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு....

சென்னை:
இளைஞர்களின் உற்சாக நாயகனாக தோழர் என்.சங்கரய்யா திகழ்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சென்னையில் தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழாவைத் தொடங்கிவைத்து அவர் பேசியது வருமாறு;

நூற்றாண்டு காணும் தோழர் என்.சங்கரய்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமையின் சார்பில் வாழ்த்த இங்கு வந்துள்ளேன். அவருடைய வாழ்க்கை என்பது கம்யூனிஸ்ட் கட்சியோடு  இணைந்த ஒன்றாகும். நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிதோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளில் அவர் பிறந்தார். அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது முதல்இன்று வரை லட்சியப் பிடிப்புடன்மக்களுக்காகவும் மனித சுரண்டலற்ற  சமூக மாற்றத்திற்காகவும் பாடுபட்டு வருகிறார்.

தொடரும் சங்கநாதம்
என்.சங்கரய்யா உரை எப்போதும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியது. அவரது உரை கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.  அவர் 100ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ள இன்று வரை அந்தசங்கநாதம் தொடர்கிறது என்பதுநமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கக்கூடிய  ஒன்றாகும்.  கடமையுணர்வு, அர்ப்பணிப்பு மிக்க அவரதுபணி போற்றுதலுக்கு உரியதாகும். 

இருபெருந்தொற்றை எதிர்கொண்டவர்
1918-1920 ல் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் ஃபுளுகாய்ச்சல் அகன்று கொண்டிருந்தபோது அவர் பிறந்தார். அவரது மிகத்தைரியமான வாழ்க்கை தற்போதுகோவிட் 19 தொற்றையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியுள்ளது. உலகில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட இரு பெரும் தொற்றுக்குச் சாட்சியாக அவர் விளங்குகிறார். சங்கரய்யாவின் நூற்றாண்டில் பலஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் அவர் இன்றும் புகழ்மிக்க தலைவராகக் கொண்டாடப்படுவதுதான் தனிச்சிறப்பு.

நூறு வயதிலும் சுறுசுறுப்பு
நூற்றாண்டுகளில் அவர் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைசென்றதோடு தலை மறைவாக இருந்து கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு கட்சிப் பணியாற்றியவர். சட்டமன்றத்திற்கு 3 முறை தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் அவர் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார். கட்சியின் பல்வேறு மட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அவர்வயது 100 ஆனாலும் தற்போதும்சுறுசுறுப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அவர்  இளைய தலைமுறையினருக்கு என்றும் உற்சாகம் அளிக்கக்கூடியவராகத் திகழ்கிறார். நூற்றாண்டு காணும் தோழர் என்.சங்கரய்யாவுக்கு ஒட்டுமொத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களையும் செவ்வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  அவர் மேலும் பல ஆண்டுகள்வாழ்ந்து  நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும்சேவையாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.