மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான என். சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலாவது ‘தகைசால் தமிழர்’ விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 14 சனிக்கிழமையன்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார். விருதுடன் தமக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசினை மாநில அரசின் கொரோனா நிவாரணநிதிக்கு முதலமைச்சரிடம் என். சங்கரய்யா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டிகே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.