சென்னை, நவ. 16- வேலூர் சிறையில் கடந்த 6 நாட்களாக உண்ணா நிலை இருந்து வந்த முருகன், சனிக்கிழமையன்று போராட்டத்தை கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதியான முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்தனர். பின்னர் முருகன் தனி அறைக்கு மாற்றப் பட்டார். அவருக்கு சலுகைகள் ரத்து செய்யப் பட்டன. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த முருகன், தனி சிறை வேண்டாம் என்றும் ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறும் சிறை அதிகாரிகளி டம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வந்தனர். எனவே, தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றக்கோரி முருகன் கடந்த 11 ஆம் தேதி உண்ணாநிலை யைத் தொடங்கினார். அவரது உண்ணாநிலை சனிக்கிழமை 6வது நாளாக நீடித்தது. அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, உண்ணாநிலையை கைவிடும்படி கூறினர். மேலும் நீதிமன்றம் தெரி வித்த கருத்தையும் தெரிவித்தனர். இதையடுத்து முருகன் தனது உண்ணாநிலையை கைவிட்டார். ஏற்கனவே சிறை அதிகாரிகள் தன்னை கொடு மைப்படுத்துவதாக கூறி முருகன் கடந்த மாதம் 18 ஆம் தேதியில் 20 நாட்கள் உண்ணாநிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.