tamilnadu

மாதர்சங்க தலையீடு: கடன் தவணை வசூலிப்பது நிறுத்தி வைப்பு

உளுந்தூர்பேட்டை, மே 19- மாதர் சங்கத்தின் ஆய்வை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒரத்தூர் கிரா மத்தில் உடனடியாக குடிநீரும், 100 நாள்  வேலைதிட்டத்தில் வேலையும் வழங்கப்பட்டது. திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூ ரில் குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இங்குள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் சுய உதவிக் குழுக்கள் மூலம்பெற்ற கடன்களுக்கான தவணையை உடனடியாக செலுத்த வேண்டுமென நிர்பந்தித்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திற னாளிகள், கைக்குழந்தை வைத்துள்ள பெண்  களுக்கு வழங்க மறுத்து வந்துள்ளனர். மேலும், வேலை கருவிகள், குடிதண்ணீர் உள்ளிட்டவற்றை பயனாளிகளே வீட்டில் இருந்து எடுத்து வரவேண்டும் என நிர்பந்தித்துள்ளனர்.

இது தொடர்பாக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இ.அலமேலு, திரு நாவலூர் மேற்கு ஒன்றியத் தலைவர் மணி மேகலை, கிளை செயலாளர் வனிதா உள்ளிட்டோர் இக்கிராமத்தில் வசிக்கும் பெண்களிடம் நேரில் ஆய்வு செய்தனர். ரேஷன் கடையில் வழங்கப்பட்டுள்ள அரிசி மோசமாக இருப்பதால், வேக வைப்ப தற்கு விறகு தேடியே காலம் கழிகிறது என  வேதனையோடு தெரிவித்துள்ளனர். 55 வய திற்கு மேல் உள்ளவர்களை வேலை பட்டிய லில் இணைக்க மறுப்பது போன்று பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர். ஊரடங்கு சூழலில் மதுக்கடைகளை திறந்ததால் குடும்பத்தில் தினசரி பிரச்சனை கள் உருவாகிறது என்றும் பெண்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக மாதர் சங்கத் தலை வர்கள் ஊராட்சி செயலாளரை நேரில் சந்தித்து பேசினர். இதனையடுதது மறுநாள் காலையே அனைத்து தெருக்களிலும் சுமார் 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 100 நாள் வேலையும் அனைவருக்கும் வழங்கினர். கூட்டுறவு வங்கியின் மேலாளர், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அலமேலுவை தொடர்பு கொண்டு “கடன் தவணையை உட னடியாக கட்ட நிர்ப்பந்திக்க மாட்டோம்” என  உறுதியளித்தார்.