tamilnadu

img

9 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு

 சென்னை, ஜூலை 4- வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நாகை, திரு வாரூர், தஞ்சை, மதுரை, விருதுநகர், திரு நெல்வேலி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய 9  மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய  வாய்ப்புள்ளது. மழை பெய்யாத பகுதி களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.