tamilnadu

img

ஆவின் பால் நிறுவன முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநாடு தீர்மானம்

ஆவின் பால் நிறுவன முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநாடு தீர்மானம்

திருவண்ணாமலை, டிச.11- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட முதல் மாநாடு வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் எஸ். அருண் கொடியேற்றி வைத்தார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. லட்சுமணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர்  டி.கே. வெங்கடேசன்  அறிக்கை வாசித்தார், மாவட்ட நிர்வாகிகள் எஸ். முருகன், ஜானி ஆபிரகாம், விதொச மாவட்ட செய லாளர் கே. கே. வெங்கடேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செய லாளர் பி. பெருமாள் நிறைவுரையாற்றினார். மாவட்ட தலைவராக ஜி. அண்ணா மலை, செயலாளராக பி. சதீஷ்குமார், பொரு ளாளராக ஆர். ரஜினி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம்  பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 45, எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 வழங்க வேண்டும், தரமான கால்நடை தீவனம் 50% மானிய விலை யில் வழங்க வேண்டும், பால்வளம்- ஒன்றியம்- ஆவினில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், மாவட்டம் முழுவதும் கூடுதலாக கால்நடை மருத்துவ மனைகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தை வழக்கறிஞர் எஸ் .அபிராமன் துவக்கி வைத்தார்.