tamilnadu

img

மீனாட்சி கிருஷ்ணன் மறைவுக்கு டி.கே. ரங்கராஜன் இரங்கல்...

சென்னை:
தினமணி நாளிதழின் ஆசிரியர்  கி.வைத்தியநாதனின்  தாயார்  மீனாட்சி கிருஷ்ணன் மறைவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தினமணி நாளிதழின் ஆசிரியர்  கி.வைத்தியநாதன் அவர்களின் தாயார் திருமதி மீனாட்சி கிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.தனது தாயாரை இழந்து வாடும்  கி.வைத்தியநாதன் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.