கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எல்லைபில்லைச்சவடி யில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனைக்கு நேரில் சென்று மருத்துவ பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து இருந்த நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடம் சமூக இடைவெளி யைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணியு மாறும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.