tamilnadu

img

முதலமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை....

சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமையன்று(ஜூலை 3) காலை 7 மணிக்கு சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற் கொண்டனர். சுமார் 1 மணி நேரம் மருத்துவமனையில் இருந்த மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு  வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப் பட்டது” என்றனர்.உடல் பரிசோதனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு கோட்டைக்கு சென்று ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார்.