tamilnadu

img

உற்பத்தியாளர்களின் ‘அக். 9’ போராட்டம் நியாயமானது!

சென்னை, அக். 4 - சிறு-குறு தொழில்களுக்கான மின் கட்டணம் பெருமளவு குறைக் கப்பட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கைக்காக சிறு-குறு தொழிற்துறையினர் அக்டோபர் 9 அன்று நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

நெருக்கடியில் 1.5 கோடி  பேரின் வாழ்வாதாரம்

தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு-குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. பெரு நிறு வனங்களுக்கு ஏராளமான சலுகை கள் வழங்கப்படும் நிலையில் சிறு- குறு தொழில்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்பதோடு, அத்தொழில் களை மேலும் நெருக்கடிக்கு தள்ளும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண விகிதங்கள் இருக்கின்றன.

ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி.,  சர்ஃபாசி சட்டம், வட்டி விகிதம், இயந்திர கொள்முதலுக்கு அளிக்கப் பட்டு வந்த மானியம் வெட்டு உள்ளிட்ட பல் வேறு நடவடிக்கைகளால் சிறு-குறு தொழில்கள் மூச்சுத்திணறிக் கொண்டி ருக்கின்றன. அத்துடன், மின் கட்டண விகித உயர்வும் சிறு-குறு தொழில்களுக்கு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளது. 

மின்கட்டண உயர்வு   மிகவும் பாரபட்சமானது

நிலைக்கட்டணம் நான்கு  மடங்குக்கு மேல் உயர்த்தப் பட்டதும், (தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கான கட்ட ணம் விதிக்கப்பட்டதும் எந்த வகை யிலும் பொருத்தமான ஏற்பாடு  கிடையாது. பல்வேறு காரணங் களால் சிறு- குறு தொழில்கள் நடத்து வோர் ஒரு மாதம் உற்பத்தியே செய்ய வில்லை என்றாலும் அவர்கள் நிலைக்கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கப்படு கின்றனர்.

சில தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக இரவு நேரத்தில் மட்டும் உற்பத்தி செய்பவையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் உச்சபட்ச பயன் பாட்டு நேரத்திற்கான கூடுதல் கட்டணம் உயர் அழுத்த மின்சாரத்தை  பயன்படுத்துவோருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தற்போது தாழ்வழுத்த மின்சாரத்தை பயன் படுத்தும் சிறு- குறு தொழில்களுக்கும்  விதிக்கப் பட்டிருப்பது மிகுந்த பாரபட்சமான நடவடிக்கையாகும்.

சலுகை -  மானியங்களைப் பெறும் பன்னாட்டு நிறுவனங்கள்

தமிழகத்தில் முதலீடு செய்ய வரும் பன்னாட்டு, உள்நாட்டு நிறு வனங்களுக்கு நிலம், பத்திரப் பதிவு, முதலீடு, தொழிலாளர் சம்பளம், ஜிஎஸ்டியில் மாநிலத்தின் பங்கு உள்ளிட்டவற்றில் பெருமளவிற்கு மானியங்கள் வழங்கப்படும் நிலையில், எந்த வகையிலும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டிபோட வாய்ப்பில்லாத சிறு-குறு தொழில் களைப் பாதிக்கும் வகையில் மின் கட்டண விகிதங்கள் உயர்த்தப் பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக நிலைக் கட்டணத்தை பெருமளவிற்கு குறைக்க வேண்டுமெனவும், உச்ச பட்ச பயன்பாட்டு நேரத்திற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்ட ணத்தை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

போராட்டத்திற்கு  முன்னதாக அரசு  பேச்சு நடத்த  வேண்டும்!

இந்தக் கோரிக்கைகளுக்காக அக்டோபர் 9 அன்றும், அதற்குப் பின்னரும் சிறு- குறு தொழில் முனைவோர் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமை யான ஆதரவையும் ஒருமைப் பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. 

போராட்டத்திற்கு அவசிய மில்லாத வகையில் தொழில் முனைவோர் அமைப்புகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள் ள்ளார்.