இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
செங்கல்பட்டு,ஜன.2- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற் குட்பட்ட விட்டிலாபுரம், சூரடி மங்களம், லட்டூர், பேரம்பாக்கம், வாயலூர், புதுப்பட்டினம், ஆயப் பாக்கம், நெரும்பூர், அமிஞ்சங்கரை, நடுவக்கரை, பெரியகாட்டுப்பாக்கம், நல்லாத்தூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மார்கழி மாதத்தில் மணிலா பயிரிட்டனர். இந்த ஆண்டும் 5 அயிரம் ஹெக்டரில் மணிலா பயிரை விவசாயிகள் விதைத்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களா கச் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையால் மணிலா பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி யுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்வதறியாது உள்ள னர். குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து ஒவ்வொரு விவசாயியும் பத்தி லிருந்து 20 ஏக்கர் வரை பயிரிட்டுள்ள னர். நடவு செய்திருந்த பயிர்களில் மழைநீரில் மூழ்கியதால் விவசாயி களுக்கு ரூ.3 முதல் 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
மறியல் போராட்டம்
வேளாண்துறை மூலம் இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு செய்ய அதிகாரிகள் வராததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விட்டி லாபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த நெறும்பூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சுமதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சதுரங்கப்பட்டினம் காவ லர்கள், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து காஞ்சி புரம் மக்களவை உறுப்பினர். எம்.செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.டி.அரசு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேளாண்மைத் துறை அலுவலர்களி டம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் வட்டார வேளாண்மை அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, ‘பாதிக் கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கணக்கீடு செய்து வருகின்றோம். ஓரிரு நாட்களில் அளவீடு செய்யப் பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை வழங்கப்படும்’ என்றார்