tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்திலும் நிறுத்தி வைத்திடுக!

சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட திருத்தமானது, வாகன ஓட்டுநர்களை கொலைகுற்றவாளிகள் போல் சித்தரிக்கிறது. விபத்துகள் எதிர்பாராமல் நடப்பதுதான். இச்சட்டமோ விபத்துக்கள் எல்லாமே ஓட்டுநர்கள்   திட்டமிட்டு நடத்துவதுபோல் வரையறை இதனால் மோட்டார் தொழிலாளர்கள் அனைவரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

படித்தோம் அரசாங்கம் வேலை தரவில்லை. அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளோ கடன் தரவில்லை. தங்களிடம் இருக்கும் சிறுமூலதனத்தை வைத்து சுயதொழில் செய்ய ஆட்டோ, கார் மற்றும் இதர வாகனங்கள் வாங்கி ஓட்டுநர் உரிமம் எடுத்து வாகனம் ஓட்டலாம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தால் வாழ்க்கையை ஓட்டலாம் என்ற நம்பிக்கையோடு வருபவர்களை இச்சட்டம் கொலை காரர்களாய் சித்தரிக்கிறது.வாகன ஓட்டுநர்கள் அனைவரும் குடிக்கிறார்கள், அதனால்தான் விபத்துகள் ஆதிகரிக்கிறது, இதை தடுக்கவே கூடுதலாக அபராதங்கள் விதிக்கிறோம் என்ற முறையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் முதல் ஆட்டோ, டாக்ஸி, வேன், லாரி, டிராக்டர் என அனைத்து வாகன ஓட்டுநர்களும் சமூகபொறுப்பற்ற குற்றவாளிகள் போல் சித்த ரிக்கப்பட்டு, கடுமையான அபராதங்களும், தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை இச்சட்டத்தை பயன் படுத்தி வழிப்பறி செய்வது போல் பலமடங்கு அபராதங்களை விதிக்கிற செய்திகள் அன்றாடம் வெளிவருகிறது. இது மோட்டார் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சத்தையும் உருவாக்கியுள்ளது. மேலும்பல இடங்களில் போலீசுக்கும் பொது மக்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

எனவே இச்சட்டத்தை நிறுத்தி வைக்கவும், அபராதங்களை குறைக்கவும் மாநில அரசுகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் கேரளா, இராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச்சேரிஅரசுகள் இச்சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன. மேலும் பல மாநில அரசுகள் அநியாய அபராதங்களைவசூல் செய்யமாட்டோம் என அறி வித்துள்ளன.இவற்றை கவனத்தில் கொண்டு தமிழக அரசாங்கமும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனை என்பதை உணர்ந்து, தமிழகத்தில் மோட்டார் வாகனச்சட்ட அமுலாக்கத்தை நிறுத்தி வைத்து மோட்டார் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் கேட்டுகொள்கிறோம்.

- எம்.சிவாஜி 
மாநிலபொதுச்செயலாளர்  தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம்(சிஐடியு)