அதிகாரிகள் உள்நோக்குடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம், நவ. 28- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் அண்ணாதுரை தலை மையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில், ஏரிகள் ஆக்கிரமிப்பு, அதிகாரி கள் விவசாயிகளுக்கு பதில் அளிப்பதில் மெத்தனப்போக்கு, மின்துறையில் லஞ்சம் இல்லாமல் வேலை நடப்பது இல்லை, வருவாய் துறையில் இழுத்தடிக்கும் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் பேசிய ஆட்சியர், இனிவரும் காலங்களில் அனைத்துத் துறை அதிகாரிகள் விவசாயிகள், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கான காரணங்களை கூற வேண்டும். மாவட்ட மக்கள் மற்றும் விவ சாயிகளிடம் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உள்ளாட்சியில் மறைமுகத்தேர்தல் தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு
மதுரை, நவ. 28- மேயர், நகர்மன்றத் தலை வர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் முறை யை ரத்து செய்யக்கோரிய வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து சென்னை உய ர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் முறை யை ரத்துச் செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த வழக்க றிஞர் முகமது ரஸ்வி சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் சிவ ஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே போன்று ஒரு வழக்கு உச்சநீதிமன்ற த்தில்தள்ளுபடி செய்ய ப்பட்டுள்ளதாக என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், தேர்தலை ரத்துச் செய்யக் கோரிய மனு தான் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார். அது குறித்த விப ரங்களை உறுதி செய்து நீதி மன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
கொலை வழக்கில் தாய் - மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, நவ.28- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6வது தெருவைச் சேர்ந்த சீனியப்பன் மகன் கூலித் தொழிலாளி சண்மு கம்(50). இவரது உறவினர் அதே பகுதி யைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பெயின்டர் முருகேசன்(55). இவருக்கும், சண்முகத்தின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்த நிலையில் சண்முகம், முருகேசனை கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரிவாளால் தாக்கினார். இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின்பேரில் சண்மு கத்தின் மீது கிழக்கு காவல் நிலைய போலீ சார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீனில் வெளியே வந்த சண்முகம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த போது, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொ டர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழ க்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் முருகே சனும், அவரது தாய் செல்வியும் சேர்ந்து சண்முகத்தை எரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் எண் 2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதி கெளதமன் குற்றம் சாட்டப்பட்ட செல்வி மற்றும் அவரது மகன் முருகேசன் ஆகிய இரு வருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
தமிழ்நாட்டிய-நாடகங்களுக்கு ரூ.75 ஆயிரம் நிதியுதவி
தூத்துக்குடி, நவ. 28- தமிழில் புதிய நாட்டிய-நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.75,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழில் சிறந்த நாட்டிய நாடகங்களை உருவாக்கி மேடையேற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்கை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் புதிய நாட்டிய - நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய கலை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள்/கலைக் குழுக்கள்/கலை நிறுவனங்கள் விண்ணப்ப படிவம் பெறவும் நிபந்தனைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு இயல்இசைநாடக மன்றம், 31, பொன்னி பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை 600 028. தொ.பே. 044 - 2493 7471. மின்னஞ்சல். www.tneinm@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். 6.12.2019 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்
தேனி ,நவ.28- சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் உதித்சூர்யா நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி யில் சேர்ந்ததாக எழுந்த புகாரின் பேரில் டாக்டர் வெங்கடே சன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து சென்னையை சேர்ந்த மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸ், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி, தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்ட சிறை மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவி பிரியங்கா மற்றும் 5 மாணவர்களுக்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. அவர்களது பெற்றோர் களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் வெங்கடேசன் ஜாமீன் கேட்டு தேனி ஜே.எம். நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அவ ரது சார்பில்ஆஜரான வக்கீல், டாக்டர் வெங்கடேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சிறுநீரக கல் அடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்ற நீதிபதி பன்னீர்செல்வம் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாமீன் வழங்கினார்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: இளைஞர் கைது
கடலூர், நவ. 28- வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவ தாக மோசடியில் ஈடுபட்டவரை காவல் துறை யினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சாத்தமாம்பட்டைச் சேர்ந்தவர் ஆ.பெருமாள் (49). இவரது மகன் ராஜ்குமாருக்கு வெளி நாட்டில் வேலை தேடிக்கொண்டிருந்த போது, அவரது உறவினர்களான எஸ்.செல்வமணி, பி.சசிகுமார் ஆகியோர் பெருமாளைத் தொடர்பு கொண்டுள்ளனர். தங்களுக்குத் தெரிந்த வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் திலீப்குமார் (29) என்பவர் கத்தார் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக தெரி வித்துள்ளனர். அதனடிப்படையில் பல்வேறு தவணை களில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2.15 லட்ச ரூபாயை பெருமாள் திலீப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பேரில், ராஜ்குமார் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு உரிய பணி வழங்கப்படவில்லை. இதனால், 5 மாதத்திற்குப் பிறகு ஊரிலிருந்து ரூ.12ஆயி ரம் அனுப்பி வைக்கப்பட்டு ராஜ்குமார் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணையில் திலீப் குமார் திட்டமிட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து, உதவி ஆய்வாளர் குருசாமி தலைமையிலான காவல் துறை யினர் சென்னையில் பதுங்கியிருந்த திலீப் குமாரை புதனன்று கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.