மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளர் எம்.ராஜனின் மருமகன் பி.அரவிந்தன் திங்களன்று (நவ.18) இமாசலப்பிரதேசம் குலுமனாலியில் அகால மரணமடைந்தார். அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், எஸ்.கே.முருகேஷ், ச.லெனின், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.