17 வது நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து மதுரை மற்றும் கோவையில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உழைத்து வருகிறது. இன்று ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற தேர்தலில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பனர்கள் டி.கே.ரங்கராஜன் எம்பி, உ.வாசுகி ஆகியோர் சென்னையில் வாக்களித்தனர்.