தஞ்சாவூர், ஏப்.4-தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் தேர் விழாவை முன்னிட்டுஏப்.16 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசுஅலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பள்ளிகள், கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகள் மற்றும் இதர முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர்விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 27 ஆம் தேதி அனைத்து மாநில அரசுஅலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஈடு செய்யும்பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.