சென்னை:
கேரளாவின் தேவசம் போர்டு எனப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்த கே.இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதற்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருக்கி றார்கள்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “கேரளாவில் இராதாகிருஷ்ணன் தேவசம் போர்டு (இந்து அறநிலையத் துறை) அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் துணிச்சலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நெஞ்சார பாராட்டுகிறது.50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பி.ஆர்.பரமேஸ்வரன். இன்று கேரளாவில் இராதாகிருஷ்ணன். வெல்லும் சமூக நீதி” என தெரிவித்திருக்கிறார்.சீமான் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில்,“கேரள முதல்வராக, தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றிருக்கும் பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரதுதலைமையிலான அமைச்சரவையினருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பினராயி விஜயன் தனது புதிய அமைச்சரவையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிபிஎம் மூத்த தலைவர்களுள் ஒருவரான கே.இராதாகிருஷ்ணனை தேவசம் வாரிய அமைச்சராக நியமித்தது பாராட்டுதற்குரிய வரலாற்றுச் சிறப்புமிக்க பெருநகர்வாகும்” எனத் தெரிவித்திருக்கிறார்.